கோவையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில், பயிரின் நடுவே களைச்செடிகளை எப்படி அகற்றுவது என்பது குறித்த ஆலோசனைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் களை கட்டுப்பாடுகள் குறித்து கடந்த 30 ஆண்டுகளாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுவாக களை எடுக்கும் கருவி, களைக்கொல்லி மருந்துகளை பயன்படுத்திகளை எடுக்கும் முறைகளை விவசாயிகள் மேற்கொண்டுவருகின்றனர். களையெடுக்கும் முறையில் உள்ள புதிய தொழில்நுட்பங்கள் என்னென்ன, காலத்திற்கேற்ப என்னென்ன பயிர்களை பயிரிடலாம் போன்ற ஆலோசனைகள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நிபுணர்களால் அளிக்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேளாண் விஞ்ஞானிகள் விவசாயிகளுக்கு அறிவுறுத்துகின்றனர்.