ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து அண்ணா தொழிற்சங்கம் சார்பாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று தமிழகம் முழுவதும் ரத்த தானம் முகாம், கண் சிகிச்சை முகாம், நலிந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும், காமராஜர் சாலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு அமைத்த முதல்வர் துணை முதல்வருக்கு பாராட்டுக்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் உழைப்போம் என்று உறுதியேற்பு உள்ளிட்ட 9 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Exit mobile version