ரஷ்யாவிடமிருந்து தடுப்பு மருந்து வாங்குவது குறித்து நாளை ஆலோசனை!!

ரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை வாங்குவது தொடர்பாக நிபுணர் குழு நாளை முதல் ஆலோசிக்க உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளார். பீஹார், குஜராத், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், ரஷ்யா கண்டுபிடித்துள்ள தடுப்பு மருந்தை வாங்குவது குறித்து மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு நாளை முதல் ஆலோசிக்க உள்ளதாக தெரிவித்த அவர், இந்த நிபுணர் குழு மாநில அரசுகளுடன் இணைந்து கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட உள்ளதாக குறிப்பிட்டார்.

Exit mobile version