காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக வேளாண் அறிவியல் மையம் சார்பாக தக்காளி விவசாயிகளுக்கு துல்லிய பண்ணையம் மூலம் சாகுபடி குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் வேளாண் அறிவியல் மையம் மூலம், விவசாயிகளுக்கு பல்வேறு விதமான
ஆலோசனைகள், மானியங்கள், இடுபொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், துல்லிய பண்ணையம் மூலம் தக்காளி சாகுபடி செய்து அதிக லாபம் பெற விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர் செந்தில்குமார் விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். துல்லிய பண்ணையம் மூலம் மாணவர்களுக்கும், விவசாயிகளுக்கும் பயிற்சி கொடுத்து வருவதாகவும், இதன் மூலம் குச்சி நடவு செய்து செடிகளை படரச் செய்தால் அதிக காய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.