ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுரை!

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

இது குறித்து கூட்டுறவுத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரேஷன் கடை ஊழியர்களுக்கு போதுமான முகக்கவசம், கையுறை, கிருமி நாசினிகள் வழங்கப்படுவதை, அக்கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்கள் உறுதி படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் ZINC, VITAMIN உள்ளிட்ட சத்து மாத்திரைகள் வழங்கவும், நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் கட்டாயம் இலவச பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட ஊழியர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட வேண்டும் எனவும், கொரோனா பாதித்த ஊழியர்கள் பணியாற்றிய ரேஷன் கடைகள் மூடப்பட்டு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதித்த ஊழியர்களின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்ய அப்பணியாளர்கள் சார்ந்துள்ள சங்க நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version