பட்ஜெட் தொடர்பாக தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய முக்கிய திட்டங்கள், அறிவிப்புகள் குறித்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கிங்ஸ் மருத்துவமனை கிளையை எங்கு அமைப்பது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சென்னைக்கு மிக அருகில் திருவள்ளூர் அல்லது காஞ்சிபுரத்தில் கிங்ஸ் மருத்துவமனை கிளையை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

Exit mobile version