பிரான்ஸ் நாட்டில் நடந்த குட்டி விமானங்களுக்கான சாகசப் போட்டிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
பிரான்ஸ் நாட்டில் உள்ள சாட்டுராக்ஸ் என்ற இடத்தில் 30 ஆண்டுகளாக குட்டி விமானங்களுக்கான சாகசப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகளில் ஒருவர் மற்றும் இருவர் மட்டுமே செல்லும் சிறு விமானங்கள் பங்கேற்றன.
சர்வதேச அளவில் நடக்கும் இந்தப் போட்டியில் விமானங்களில், விமானிகள் வானில் வண்ணப் புகையை உமிழ்ந்தும், தலைகீழாக குட்டிக் கரணம் அடித்தும் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இந்த போட்டியை ஏராளாமான பொதுமக்கள் கண்டு மகிழ்ந்த நிலையில், இந்தப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் லூயிஸ் வேனலும், பெண்கள் பிரிவில் ஆடே லெமொரன்ட்டும் வெற்றி பெற்றனர். இவர்கள் இருவருமே பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.