புகை பிடிப்பதை கைவிடும் போது உடலில் என்ன நடக்கும்? என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? -சிறப்பு தொகுப்பு

புகை பிடிப்பதை ஒருவர் கைவிடும் போது அவரது உடலில் என்ன எல்லாம் நடக்கும்? அவருக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? – இந்த செய்தித் தொகுப்பில்
பார்ப்போம்…

சிகரெட் பிடிக்கும் போது ஒருவரின் ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு சீராக இருக்காது. சிகரெட் பிடிப்பதை நிறுத்திய 20ஆவது நிமிடத்தில் இவை இரண்டும் இயல்பு நிலைக்கு வரும்.

சிகரெட் பிடிக்கும் போது ரத்தத்தில் கார்பன் மோனாக்சைடு வாயுவும், நிகோடின் என்ற நச்சும் கலக்கும். சிகரெட் பிடிப்பதை நிறுத்திய 8 மணி நேரத்தில் இவற்றில் அளவு இரத்தத்தில் பாதியாகக் குறைந்துவிடும். சிகரெட் பிடிக்கும் போது நுரையீரல் கார்பன் மோனாக்சைடு என்ற நச்சு வாயுவால் நிறையும், சிகரெட் பிடிப்பதை நிறுத்திய 24 மணி நேரத்தில் கார்பன் மோனாக்சைடு நுரையீரலில் இருந்து முற்றிலுமாக வெளியேறிவிடும்.

சிகரெட் பிடிப்பதைக் கைவிட்ட 48 மணி நேரத்தில் உடலில் உள்ள நிகோடின் நச்சு முற்றிலுமாக வெளியேறிவிடும். சிகரெட் பிடிப்பதைக் கைவிட்ட 72 மணி நேரத்தில் சுவாசம் சீரடையும், உடலின் ஆற்றல் அதிகரிக்கத் தொடங்கும்.

சிகரெட் பிடிப்பதைக் கைவிட்ட 2 முதல் 12 வாரங்களில் இரத்த ஓட்டம் சீரடையும். சிகரெட் பிடிப்பதைக் கைவிட்ட 3 முதல் 9 மாதங்களில் நுரையீரலின் செயல்பாடு 10% அதிகரிப்பதால் மூச்சுத் திணறல், இருமல் உள்ளவர்கள் குணமடைவார்கள்.

சிகரெட் பிடிப்பதைக் கைவிட்ட 5 ஆண்டுகளில் ஹார்ட் அட்டாக் தாக்குவதற்கான அபாயம் 50% குறையும்.

சிகரெட் பிடிப்பதைக் கைவிட்ட 10 ஆண்டுகளில் நுரையீரல் புற்றுநோய் தாக்குவதற்கான அபாயம் 50% குறையும். இதர புற்று நோய்கள் தாக்கும் வாய்ப்பும் குறைக்கப்படும்.

எனவே சிகரெட்டைக் கைவிடுங்கள், ஆரோக்கியமான வாழ்க்கையைக் கையில் எடுங்கள்.

Exit mobile version