விரைவில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் கோயம்பேடு பேருந்துநிலையத்தில் பொருத்தப்படும் என வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு பேருந்துநிலையத்தில் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனையடுத்து பேருந்துநிலையத்தில் சி.எம்.டி.ஏ. சார்பாக 150 சிசிடிவி கேமாரக்களும், காவல் துறை தரப்பில் 200 சிசிடிவி கேமராக்களும் பழுது நீக்கி மீண்டும் பொருத்தபட்டுள்ளது.
குறிப்பாக ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் தொடர்ச்சியாக குற்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதால் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களுக்கு காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன் அளித்த பேட்டியில், விரைவில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் எனவும் நைட் விஷன் கேமராக்களும், இரவில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.