தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் நியமன வழக்கில், தமிழக அரசின் விளக்கத்தை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பின் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம் மற்றும் கோவை மாவட்ட அ.தி.மு.க வழக்கறிஞர் சங்க நிர்வாகி ஆறுமுகம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்தநிலையில் ராஜாராம், ஆறுமுகம் ஆகிய 2 பேரும் விதிகளுக்கு புறம்பாக லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கில் தமிழக அரசு சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ராஜாராம், ஆறுமுகம் ஆகிய இருவரும் லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னதாகவே தங்களது பழைய பதவிகளை ராஜினாமா செய்துவிட்டனர் என்று விளக்கமளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.