திமுகவினர் கலாட்டா செய்யாத ஒரே கடை, சாக்கடை என அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை விந்தியா விமர்சித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, அவர் பிரசாரம் மேற்கொண்டார். விராலிமலை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கரை ஆதரித்து இலுப்பூர் பகுதியில் நடிகை விந்தியா வாக்கு சேகரித்தார்.
அதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் கார்த்திக் தொண்டைமானை ஆதரித்தும், திருமயம் தொகுதியில் போட்டியிடும் வைரமுத்துவை ஆதரித்து அரிமளத்தில் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், அனைத்து தரப்பு மக்கள் மீதும் அராஜகத்தை ஏவும் திமுகவினர் பிரச்னை செய்யாத கடை, சாக்கடை என சாடினார்.