சமூக நீதியின் தொட்டிலாம் தமிழ்நாட்டின் 69 சதவீத இடஒதுக்கீட்டை காப்பாற்ற தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மராத்தா இட ஒதுக்கீடு தொடர்பாக அண்மையில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், மாநில அரசின் ஆளுமைக்கு உட்பட்ட கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டிற்கான பரிந்துரையை மட்டுமே மத்திய அரசுக்கு வழங்க முடியும் என கருத்து தெரிவித்ததை சுட்டிக்காட்டியுள்ளனர்.
உச்சநீதிமன்றத்தின் இந்த விளக்கம், இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் ஆன்மாவை சிதைத்து விடும் அபாயம் உள்ளதாக கூறியுள்ளனர்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 1993ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றி, அதனை 9வது அட்டவணையில் சேர்த்து சமூக நீதி காத்த வீராங்கனை என்று பெயர் பெற்றதையும் நினைவு கூர்ந்துள்ளனர்.
உச்சநீதிமன்றத்தின் கருத்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதிக்கும் என இருவரும் எச்சரித்துள்ளனர்.
ஏழை எளிய மக்கள் கல்வி பெறவும், வஞ்சிக்கப்பட்ட மக்கள் கைதூக்கிவிடப்படவும் இட ஒதுக்கீடு முறையே மிகச் சிறந்த வழி என்பதால் தமிழ்நாடு அரசு 69 சதவீத இட ஒதுக்கீட்டைக் காப்பாற்ற சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசுக்கு அதிமுக அறிவுறுத்தல்
69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது – அதிமுக
மாநில அரசின் ஆளுமைக்கு உட்பட்ட வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் கருத்து
இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசுகள் மத்திய அரசுக்கு பரிந்துரை மட்டுமே வழங்க முடியும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது
உச்சநீதிமன்றத்தின் விளக்கம் இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் ஆன்மாவை சிதைத்து விடும் அபாயம் உள்ளது – அதிமுக
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 1993ல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 69% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றினார்
இட ஒதுக்கீட்டை 9வது அட்டவணையில் சேர்த்து சமூக நீதி காத்த வீராங்கனை என்று பெயர் பெற்றார் – அதிமுக
உச்சநீதிமன்றத்தின் கருத்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதிக்கும்
ஏழை எளிய மக்கள் கல்வி பெறவும், வஞ்சிக்கப்பட்ட மக்கள் கைதூக்கிவிடப்படவும் இட ஒதுக்கீடு முறையே மிகச் சிறந்த வழி
தமிழ்நாடு அரசு 69% இட ஒதுக்கீட்டைக் காப்பாற்ற சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – அதிமுக