கப்பலோட்டிய தமிழன் திரு. வ.உ. சிதம்பரனார் அவர்களின் 152 வது பிறந்த நாளையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு, கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களில் முக்கியமான ஒருவராகத் திகழ்ந்தவரும், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என பன்முகத் தன்மை பெற்றவருமான கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் திரு. வ.உ. சிதம்ரம் பில்லஈ அவர்களின் 152-வது பிறந்த நாளான, இன்று காலை (5.9.2023 – செவ்வாய் கிழமை), தூத்துக்குடி வடக்கு மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் உள்ள திரு. வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களுடைய நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ‘புரட்சித் தமிழர்’ திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் சார்பில், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. என். தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ., கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான திரு பா. வளர்மதி, கழக அமைப்பு செயலாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான் திரு. ப. மோகன், தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. எஸ்.பி. சண்முகநாதன், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. சி.த. செல்லப்பாண்டியன், கழக அமைப்புச் செயலாளரும், கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளருமான திரு. என். சின்னதுரை, கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் திரு. பி. சின்னப்பன், முன்னாள் எம்.எல்.ஏ., ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. பி. மோகன், முன்னாள் எம்.எல்.ஏ., உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
திரு. வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு மரியாதை செலுத்திய இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு ஆகிய மாவட்டங்களில், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. கடம்பூர் சி. ராஜூ, எம்.எல்.ஏ தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு எஸ்.பி. சண்முகநாதன் ஆகியோர் இணைந்து சிறப்பான முறையில் செய்திருந்தனர்.
கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்தச் செய்தி வெளியிடப்படுகிறது.
Discussion about this post