தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் சசிகலாவிற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றம்

அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் சசிகலாவுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில், சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்டு, அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்று வலுவான எதிர்கட்சியாக விளங்குகிறது. இந்த நிலையில், அரசியலில் இருந்து ஒதுங்கிய சசிகலா, அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் மதிப்பை அபகரிக்கும் நோக்கில், தொண்டர்களிடம் பேசுவதாக நாடகம் அரங்கேற்றி வருகிறார். இதையடுத்து, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சசிகலாவுக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்த தீர்மானத்தை ஆதரித்து, தமிழ்நாடு முழுவதும் அதிமுக மாவட்ட கழகங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் மாவட்டம் அதிமுக அலுவலகத்தில், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மூத்த கட்சி நிர்வாகிகள் இந்த தீர்மானத்தை நிறைவேற்றினர்.

Exit mobile version