நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், அரசு மருத்துவர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்களுடன், முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் கொரோனா 2 வது அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில், மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கை, ரெம்டெசிவிர் மருந்து ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்நிலையில், குமாரபாளையம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகளுடன், குமாரபாளையம் சட்ட உறுப்பினர் தங்கமணி ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பாரதி, மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கையிருப்பு குறைவாக உள்ளதாக தெரிவித்தார்.
மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் சேமிப்பு கொள்கலன் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.