அ.தி.மு.க. தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இதனை தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் பணியில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. வேட்பாளர் தேர்வில் கூட்டணி கட்சிகள் ஈடுபட்டு வரும் நிலையில் அ.தி.மு.க. தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
மக்களவை மற்றும் இடைத்தேர்தல் பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.