பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது என்பதை சிம்பாலிக்காக காட்டவே, ஸ்டாலின் சைக்கிளில் சென்றதாக அதிமுக சென்னை மண்டல தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோவை சத்யன் விமர்சித்துள்ளார்.
செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பாக, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சென்னை மண்டல தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோவை சத்யன், திமுக ஆட்சி அமைந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என உறுதியளித்து விட்டு அதை நிறைவேற்றாமல், சிம்பாலிக்காக மக்களுக்கு உணர்த்தும் வகையில், ஸ்டாலின் சைக்கிளில் சென்றதாக விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த நிர்வாகிகள் மக்களுக்கான தேவைகளை கண்டறிந்து செயல்பட்டால் உள்ளாட்சித் தேர்தலில் பெரும் வெற்றியை அதிமுக பெறும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.