அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் தமிழகம் முழுவதும் இன்று தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோர், விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம் என்று அதிமுக தலைமை அறிவித்து இருந்தது. அதன்படி, விருப்ப மனு விநியோகம் தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது.
மாவட்ட தலைநகரங்களில் உள்ள அதிமுக அலுவலகங்களில் இன்றும், நாளையும் விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. விழுப்புரத்தில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகத்தை, விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார். ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து விருப்ப மனுக்களை பெற்று சென்றனர்.