50 ஆண்டுகாலத்தில் இல்லாத வளர்ச்சியை அதிமுக அரசு வழங்கியுள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கடந்த 7 ஆண்டுகளில் கோவை மாவட்டத்திற்கு 50 ஆண்டுகாலத்தில் இல்லாத வளர்ச்சியை அதிமுக அரசு வழங்கியுள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கோவை ஆர்.எஸ்.புரம், லாலி ரோடு, பி.என்.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக, வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சர் மற்றும் வேட்பாளருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது பேசிய அமைச்சர், குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கடந்த 7 ஆண்டுகளில் கோவை மாவட்டத்திற்கு 50 ஆண்டுகாலத்தில் இல்லாத வளர்ச்சியை அதிமுக அரசு வழங்கியுள்ளதாக கூறினார்.

Exit mobile version