தலைமைக் கழகத்தில் நடைபெற்ற அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் ஆலோசனைக் கூட்டம்!

அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் ஆலோசனைக் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

அதிமுக தேர்தல் அறிக்கை தொடர்பாக தயாரிப்பு குழுவின் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் அமைப்புச் செயலாளர் பொன்னையன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, வருகிற சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், தேர்தல் அறிக்கையை தயாரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் சி.வி.சண்முகம், செங்கோட்டையன், ஓ.எஸ்.மணியன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதன், செம்மலை, கோகுல இந்திரா, ஜேசிடி பிரபாகர், அன்வர் ராஜா, வேணு கோபால் உள்பட 11 பேர் கலந்து கொண்டனர்.

Exit mobile version