தூத்துக்குடியில், திருமண அழைப்பிதழ் வடிவில் தேர்தல் அழைப்பிதழ் அச்சிடப்பட்டு அதிமுகவினர் நூதன தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளார்கள் பெயர்கள், திருமண அழைப்பிதழ் வடிவில் அச்சிடப்பட்டு, பொதுமக்களுக்கு அதிமுகவினர் விநியோகம் செய்தனர். தூத்துக்குடி நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சின்னப்பனை ஆதரித்து அதிமுகவினர் நூதன தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தேர்தல் அழைப்பிதழ்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.