காய்கறி சந்தையை முறைப்படுத்தும் நடவடிக்கையை திமுக அரசு எடுக்க வேண்டும் என அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதுள்ள விலைவாசி ஏற்றத்தினை கருத்தில் கொண்டு, காய்கறி சந்தையை முறைப்படுத்த வேண்டும் என்றும், தொழில் என்றால், உற்பத்தியாளர்கள், மொத்த, சில்லரை விற்பனையாளர்கள், நுகர்வோர் என அனைவரும் சமமாக பயன்பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 7 மாத திமுக ஆட்சியில், காய்கறிகளின் விலை ஏறிக் கொண்டே செல்வதாக கூறியுள்ள அவர், காய்கறிகள் விலை ஏற்றத்தின் பயன் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை என்றும், நுகர்வோர்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கு காரணம், காய்கறி சந்தையை முறைப்படுத்தும் அமைப்பு அரசிடம் இல்லாதது தான் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.