4 மொழியில் சரளமாக பேசி அனைவரையும் கவர்ந்த அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர்

மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் மேடையில் உளரும் போது, அதிமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் சரவணன் தொண்டர்கள் மத்தியில் 4 மொழியில் சரளமாக பேசியது மக்களை வெகுவாக கவர்ந்தது.

நாகையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், நாடாளுமன்ற வேட்பாளர் சரவணனை அறிமுகம் செய்து வைத்ததுடன், அவர் வெற்றி பெற கூட்டணி கட்சியினர் பாடுபட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, பேசிய வேட்பாளர் சரவணன், தான் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றதும் அங்கு தொகுதி மக்களின் கோரிக்கைக்கு குரல் கொடுப்பேன் என்பதை ஹிந்தி, ஆங்கிலம், மலையாளம், தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் பேசி அசத்தியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

Exit mobile version