ஈரோடு கிழக்குத் தொகுதியின் இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் சார்பாக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இந்த வேட்பாளர் அறிப்பினை அறிவித்துள்ளார். அதன்படி, அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கே.எஸ். தென்னரசு, புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் தலைமையில் அதிமுக சார்பாக இரட்டை இலைச் சின்னத்தில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று சட்டசபை சென்றவர். 2016 தேர்தலில் கே.எஸ். தென்னரசு அவர்கள் 64879 வாக்குகள் பெற்று மிகப்பெரிய வெற்றியினைப் பெற்றிருந்தார். தற்போது இந்த இடைத்தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் அதிமுகவின் வெற்றி உறுதியாகி உள்ளது.