விருப்ப மனு வாங்க நிர்வாகிகள் நியமனம்: அதிமுக

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்புக் கோருபவர்கள் மனுக்களைப் பெறுவதற்காக மாவட்டந்தோறும் நிர்வாகிகளை அதிமுக தலைமைக் கழகம் நியமித்துள்ளது.

வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டத்துக்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உட்பட மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்துக்கு துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உட்பட இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் உட்பட இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். தென்சென்னை வடக்கு மாவட்டத்துக்கு அமைப்புச் செயலாளர் பொன்னையன் உள்ளிட்ட நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டத்துக்குத் தம்பிதுரை, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்துக்கு அமைச்சர் சீனிவாசன், அமைப்புச் செயலாளர் நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு புறநகர் மாவட்டத்துக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் உட்பட மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் புறநகர் மாவட்டத்துக்குத் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உட்பட நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை புறநகர் மாவட்டத்துக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். வடசென்னை தெற்கு மாவட்டத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் உட்பட மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாநகர் மாவட்டத்துக்கு அமைச்சர் செல்லூர் ராஜு உட்பட நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் வடக்கு மாவட்டத்துக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் உட்பட இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் உட்பட மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் அமைச்சர் உதயகுமார் உட்பட நால்வரும், திருவாரூர் மாவட்டத்தில் அமைச்சர் காமராஜ் உட்பட இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உட்பட இருவரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட மூவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்தில் அமைச்சர் துரைக்கண்ணு உட்பட மூவரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு உட்பட மூவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மாநகர் மாவட்டத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உட்பட மூவரும், வேலூர் மேற்கு மாவட்டத்தில் அமைச்சர்கள் வீரமணி, நீலோபர் கபீல் உட்பட மூவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட நால்வரும், திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன் உட்பட ஐவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாநகர் மாவட்டத்தில் அமைச்சர் ராஜலெட்சுமி உட்பட மூவரும், கடலூர் மத்திய மாவட்டத்தில் அமைச்சர் சம்பத் உட்பட மூவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன் உட்பட நால்வரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உட்பட மூவரும், அரியலூர் மாவட்டத்தில் அமைச்சர் வளர்மதி உட்பட மூவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version