காஞ்சிபுரம் நகரில் அதிமுக நிர்வாகிகள் தொடங்கிய பட்டு சேலை கடையை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குத்துவிளக்கு ஏற்றி திறந்துவைத்தார்.
காஞ்சிபுரத்தில் உற்பத்தியாகும் பட்டு சேலைகளுக்கு இந்தியா மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் அமோக வரவேற்பு உள்ளது. காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக அவைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் காஞ்சி பட்டு கூட்டுறவு சங்க துணை தலைவர் கோல்ட் ரவி ஆகியோர் பங்குதாரர்களாக இணைந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே, பிஎஸ்கே என்ற தெருவில் காஞ்சிபுரம் கோல்டன் சில்க்ஸ் என்ற பெயரில் புதிதாக பட்டு சேலை விற்பனை கடையை தொடங்கியுள்ளனர். இந்த கடையை துணை முதலமைச்சர் ஓ .பன்னீர்செல்வம் ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், அவைத்தலைவர் மதுசூதனன் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.