ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் வாக்கு சேகரிப்பு பிரசாரம் நடைபெற்றது.
அதிமுக கூட்டணி சார்பில் வேலூர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகமும், ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர் ஜோதிராமலிங்கராஜாவும் போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து செயல் வீரர்கள் கூட்டமும் வாக்கு சேகரிப்பு பிரசாரமும் நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் வீரமணி மற்றும் நிலோபர் கபீல் ஆகியோர் பங்கேற்று பிரசாரம் மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான தொண்டர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.