2000 ஆண்டுகள் ஆனாலும் அதிமுக ஆட்சி தான் தொடரும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், ஓய்வு பெற்ற காவல் துறையினரால் பயிற்சி அளிக்கப்பட்டு தேர்வில் வெற்றி பெற்றவர்களை வாழ்த்தும் விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழ்நாடு முழுவதும் மர்ம காய்ச்சல், பன்றி காய்ச்சல் பரவாமல், தடுப்பதற்கு சுகாதார பணிகள் தீவிரமாக மாவட்டங்கள் முழுவதும் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு சந்திப்பில் அதிசயம் ஏதும் கிடையாது என்று தெரிவித்த அவர், இடைத்தேர்தல் நிறுத்தப்படும் என்ற தங்க தமிழ் செல்வன் கருத்திற்கு, குளறுபடிகள் செய்து தேர்தலை நிறுத்த முடியாது என்று தெரிவித்தார். மேலும், 2 வருடம் அல்ல, 2000 வருடங்களுக்கு அதிமுக ஆட்சி தான் நடைபெறும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.