அதிமுக வேட்பாளர்கள் இன்று முதல் வேட்பு மனுத்தாக்கல்

அதிமுக வேட்பாளர்கள் இன்று முதல் வேட்பு மனுத்தாக்கல் செய்கின்றனர். வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.மேலும் காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கும் அன்றையதினம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி,வேட்புமனுத்தாக்கல் கடந்த 19-ஆம் தேதி துவங்கியது. அதிமுக வேட்பாளர்கள் இன்று காலை 10 மணிமுதல் 10.30 வரையிலும், நண்பகல் 2 மணிமுதல் 3 மணி வரையிலும், வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளனர். இன்று வேட்புமனுத்தாக்கல் செய்ய முடியாதவர்கள் வரும் 25ஆம் தேதி, காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள்ளாக அந்தந்த தொகுதிகளில் உள்ள மண்டல அலுவலகங்களில் வேட்பு மனுவை தாக்கல் செய்ய இருக்கின்றனர்.

 

Exit mobile version