தெலுங்கில் வெற்றிபெற்ற அர்ஜூன் ரெட்டி படத்தை இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், தமிழில் இயக்குநர் பாலாவையும், நடிகர் விக்ரமின் மகன் துருவையும் வைத்து ரீமேக் செய்யும் பணியில் ஈடுபட்டது. வர்மா எனத்தலைப்பிடப்பட்ட இப்படம் பிப்ரவரி 2-வது வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட உருவாக்கத்தில் பல்வேறு வித்தியாசங்கள் இருப்பதால் ஒட்டுமொத்த படத்தையும் கைவிட முடிவு செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. மேலும் வர்மா திரைப்படம் வேறு வெர்ஷனில் மீண்டும் எடுக்கப்பட்டு புதிய திரைப்படம் ஜுன் மாதத்தில் வெளியாகும் என்றும் இந்த படத்திலும் துருவ் நாயகனாக நடிப்பார் என தெரிவிக்கப்பட்டது.
அதே நேரம் புதிய இயக்குநர் தலைமையிலான குழு இந்த படத்தை இயக்கும் என தயாரிப்பு நிறுவனமானஇ4எண்டர்டெய்ன்மென்ட் தெரிவித்தது. இந்நிலையில், அர்ஜுன் ரெட்டி படத்தை தெலுங்கில் இயக்கிய இயக்குனர் சந்தீப் வங்காவின் உதவி இயக்குனர் கிரிசய்யா தமிழில் இயக்குகிறார். படத்திற்கு ‘ஆதித்ய வர்மா’ எனப் பெயர் சூட்டியுள்ளனர். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். பனிடா சந்து கதாநாயகியாக நடிக்கிறார்.