ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இராமநாதசுவாமி கோயிலில் அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
ராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையடுத்து அம்பாள் தேரோட்டம், மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்துக் கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆடித்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் இராமநாத சுவாமிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.