காஞ்சிபுரத்தில் ஆதி அத்திவரதர் வெண்பட்டு உடுத்தி, மல்லிகைப்பூவுடன் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார். காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் ஆலய திருக்குளத்திலிருந்து, 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும், ஆதி அத்திவரதர் கடந்த 1ம் தேதி பொதுமக்கள் தரிசனத்திற்காக ஆலய வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார்.
இதையடுத்து ஆதி அத்திவரதரை ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் தரிசித்து செல்கின்றனர். 4ம் நாளான இன்று, வெண்பட்டு உடுத்தி மல்லிகை பூவுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். எனவே, அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் வரிசையில் நின்று வெண்பட்டு உடுத்தி காட்சி தரும் அத்தி வரதரை தரிசித்து வருகின்றனர்.