ஆஸ்திரேலிய – இந்திய அணி இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, அடிலெய்டின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்சில் இந்திய அணி 250 ரன்கள் எடுத்திருந்தது, அடுத்ததாக களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பும்ரா மற்றும் அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரரான டிராவிஸ் ஹெட் விக்கெட்டை ஷமி கைப்பற்றினார். இதனால் ஆஸ்திரேலியா அணி, 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது . முதல் இன்னிங்ஸில் 15 ரன்கள் முன்னிலையில் உள்ள இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் முரளி விஜய் 18 ரன்களிலும், ராகுல் 44 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் விராட் கோலி 34 ரன்களில் ஆட்டமிழந்தார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.