போப் உரையாற்றிய மேடையில் சிறுமியின் குறும்பை ரசித்த மக்கள்

வாட்டிகனில் போப் பிரான்சிஸ் உரையாற்றிக் கொண்டிருந்த மேடையில் சிறுமி ஒருவர் கைதட்டி, நடனமாடிய காட்சிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

போப் உரையை கேட்க வந்திருந்த கூட்டத்தில், தாயுடன் அமர்ந்திருந்த நோய்வாய்ப்பட்ட சிறுமி, திடீரென ஓடி சென்று, பெரிய பளிங்கு மேடையில் ஏறினார். அங்கு உரையாற்றி கொண்டிருந்த போப் பிரான்சிசுக்கு, இடையூறு ஏற்படுத்தும் வகையில், முன்னும் பின்னுமாக குதித்துக்குகொண்டும் அதிக ஓசையுடன் கைதட்டிக் கொண்டும் இருந்த சிறுமியை, அமைதிப்படுத்த காவாலாளிகளுக்கு போப் சைகை செய்தார். தாயிடம் கொண்டு விடப்பட்ட அந்த சிறுமி, மீண்டும் மேடைக்கு ஓடிவந்ததால் கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் எழுப்பினர்.

ஒரு மணிநேரத்துக்கும் மேலாக சிறுமியின் குறும்புகளை, போப் பிரான்சிஸ் அனுமதித்தார். மேலும் இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களை பார்க்கும்போது அவர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்யவேண்டும் என்று அவர் கூறினார்.

Exit mobile version