வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கூடுதலாக பயிலரங்க பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால் தமிழக அரசிற்கு பட்டதாரிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் தொழிற்பயிற்சி மையத்தில் வேலை வாய்ப்பற்றவர்களுக்கான ஊக்கத்தொகை பெற்று வரும் பட்டதாரிகளுக்கு திறனை மேம்படுத்த பயிலரங்க பயிற்சி நடத்தப்பட்டது. இதனை மாவட்ட நிர்வாகம் மற்றும் திறன் மேம்பாட்டு கழகம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், தொழில்பயிற்சி நிலையம் இணைந்து நடத்தியது. இதில் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, சுயதொழில் உள்ளிட்ட, பயிற்சிகள் சிறந்த வல்லுநர்கள் மூலம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வழங்கப்பட்டு வரும் 400 ரூபாய் ஊக்கத்தொகைக்கும் தற்போது அளிக்கப்பட்டு வரும் பயிலரங்க பயிற்சிக்கும் தமிழக அரசிற்கு பட்டதாரிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.