பியூஸ் கோயலுக்கு இடைக்கால நிதியமைச்சராக கூடுதல் பொறுப்பு

மத்திய ரெயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு இடைக்கால நிதியமைச்சராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, சிறுநீரக கோளாறு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து வரும் பிப்ரவரி 1ம் தேதி யார் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று கேள்வி எழுந்தது. இந்த நிலையில் பிரதமர் மோடி, இடைக்கால நிதியமைச்சராக பியூஸ் கோயலை பரிந்துரை செய்து குடியரசு தலைவருக்கு அனுப்பினார்.

அதன்படி புதிய இடைக்கால நிதியமைச்சராக பியூஸ் கோயலை நியமித்து குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதையடுத்து வரும் 1ம் தேதி மத்திய பட்ஜெட்டை பியூஸ் கோயல் தாக்கல் செய்வார். அருண் ஜேட்லி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version