தேசிய புலனாய்வு அமைப்புக்கு கூடுதல் அதிகாரம்-அமைச்சர் அமித்ஷா

தேசிய புலனாய்வு அமைப்புக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

வெளிநாட்டில் உள்ள இந்தியர்களையும், இந்திய நலன்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியவர்களை விசாரிக்க, மத்திய புலனாய்வு அமைப்புக்கு இதன் மூலம் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொண்டு வந்த இந்த சட்ட மசோதாவுக்கு ஆதரவாக 278 வாக்குகள் கிடைத்தன. இந்த மசோதா, அதிகார முறைகேட்டுக்கு வழி வகுக்கும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஒருபோதும் தேசிய புலனாய்வு சட்டம் 2019 ஐ தவறாக பயன்படுத்தாது என்று அமித்ஷா பதிலுரையில் தெரிவித்தார். இச்சட்டத்தால் பயங்கர வாதத்தை ஒடுக்க முடியும் என அமித்ஷா கூறியுள்ளார்.

Exit mobile version