தர்பார் படத்தின் கூடுதல் காட்சிகள் திரையிடுவதை தடுக்க வேண்டும்- சமூக ஆர்வலர் புகார்

தர்பார் படம் வெளியாகும் நாளில், அனுமதி பெறாத கூடுதல் காட்சிகளையும், அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுவதையும் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் தேவராஜன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்  நடித்த “தர்பார்” திரைப்படம் வரும் 9ந் தேதி வெளியாகிறது.  சென்னை உள்ளிட்ட நகரங்களில்  நள்ளிரவு 1.00 மணி , விடியற்காலை 4.00 மணி , 8.00 மணி என படத்தை திரையிட இருப்பதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும், திரையரங்குகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பதை தடுக்க வேண்டும் எனவும் அவர் தனது புகாரில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version