கஜா புயலால் சேதமடைந்த படகுகளுக்கு கூடுதல் இழப்பீடு அறிவிப்பு

கஜா புயலால் சேதமடைந்த ஃபைபர் படகுகளுக்கு கூடுதல் இழப்பீடு அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, கஜா புயலால் சேதமடைந்த ஃபைபர் படகுகளுக்கு 5 கோடியே 70 லட்சம் ரூபாயும், பாதி சேதமடைந்த படகுகளுக்கு ஒரு கோடியே 13 லட்சம் ரூபாயும் என 1051 படகுகளுக்கு 6 கோடியே 83 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

சேதமடைந்த ஃபைபர் படகுகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 85 ஆயிரம் ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று கடந்த ஜனவரி 4ம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி தற்போது கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version