கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுத் தரப்பில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.
பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு பணிகள் வரும் ஜூன் மாதம் முதல் துவங்கவுள்ளது. இதுகுறித்து தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் விவேகானந்தன் நியூஸ்ஜெ டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், இதுவரை ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்தார். ஜூலை 3ம் தேதி முதல் பொதுக் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக தெரிவித்த அவர், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு புதிய குழுவை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார். தொழில்நுட்ப கல்வி நிறுவன கூடுதல் இயக்குநர் தலைமையில் இந்த குழு செயல்படும் என்றும் அவர் கூறினார்.