சமீபத்தில் நடைப்பெற்ற ஆய்வு ஒன்றில் பாக்கெட் தின்பண்டங்களில் ஆபத்தான அளவிற்கு உப்பு மற்றும் கொழுப்பு சேர்க்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது,
டெல்லியில் அமைந்துள்ள இந்திய அறிவியல் மையத்தின், சுற்றுச்சூழல் கண்காணிப்பு ஆய்வகமானது சமீபத்தில் பல்வேறு உணவு மாதிரியை சேகரித்து ஆய்வுகளை மேற்கொண்டது.அந்த ஆய்வில் பாக்கெட் தின்பண்டங்கள், நூடுல்ஸ், சூப் பவுடர்கள், பர்கர், பிரைடு சிக்கன், பீட்சா, சாண்ட்விச், வேப்பர் பிஸ்கட் மற்றும் பல்வேறு துரித உணவுகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டது. இதன்படி பிரபலமான நிறுவனங்களின் 14 சிப்ஸ்-நூடுல்ஸ் வகைகள், 19 பர்கர்-பீட்சா உள்ளிட்ட பொருட்கள் என மொத்தம் 33 தின்பண்டங்களை ஆய்வு செய்தனர்.அதாவது ஆபத்தான அளவிற்கு உப்பு மற்றும் கொழுப்பு ஆகியவை அளவுக்கு அதிகமாக அதில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுபோன்ற உணவுகளை சாப்பிடுவது உடல் உள் உறுப்புகளை பல்வேறு வகையில் பாதிக்கும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. எனவே இது சம்பந்தமாக உரிய நடவடிக்கைகளை இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் எடுக்க வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளனர்.