குளம் போல் காட்சி அளிக்கும் அடவி நயினார் அணை

கடும் வறட்சி காரணமாக நெல்லை மாவட்டம் அடவி நயினார் அணை குளம் போல் காட்சி அளிக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான மேக்கரையில் அமைந்துள்ளது அடவி நயினார் அணை. இந்த அணையின் மூலம் வடகரை, அச்சன் புதூர், வலசை,இலத்தூர், கரிசல் , உள்ளிட்ட 8 கிராமங்களை சேர்ந்த 7 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெருகின்றன. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யவில்லை. இதனால், அணைக்கு வரும் நீரின் அளவு கணிசமாக குறைந்தது. 132 அடிகொண்ட அடவி நயினார் தற்போது 10 அடியாக சரிந்துள்ளது. இதனால், விவசாய நிலங்கள் கடும் பாதிப்பை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது.

Exit mobile version