யாஷிகா எனும் பார்ட்டி பக்தை… பிரபலங்கள் போதையுடன் சங்கமிக்கும் சமுத்திரமாக மாறி வரும் ஈசிஆர்!

வாரந்தோறும் பார்ட்டிக்காக பாண்டிச்சேரி சென்று திரும்பும் பிக்பாஸ் புகழ் யாஷிகா இம்முறை வீட்டிற்கு திரும்பாமல் மருத்துவனைக்கு திரும்பி இருக்கிறார். விபத்து நடந்த இரவு; என்ன நடந்தது ஈசிஆரில்….?

 

18 வயது பெண்ணாக பிக்பாஸில் யாஷிகா நுழைந்த போது இந்த பெண் 2 வாரம் தாக்கு பிடித்தாலே அதிசயம் என்று தான் நினைத்தார்கள் பார்வையாளர்கள். ஆனால் பொறுமையும் அவரின் புத்தி கூர்மையும் அவரை இறுதிச்சுற்று வரை இழுத்து வந்தது.

வயதுக்கு மீறிய அவரின் முதிர்ச்சியை பார்த்து, கமலே வாய் பிளந்து வியந்த காட்சிகளும் பிக்பாஸில் அரங்கேறி இருக்கிறது.

பிக்பாஸில் அவரின் பெர்ஃபான்மென்ஸை பார்த்து கோலிவுட்டின் அடுத்த சில்க் ஸ்மிதா என்று கொண்டாடினார்கள் அவரின் ரசிர்கர்கள். ஆனால் வெளிவந்த பிறகுதான் அவரின் வேஷம் கலைந்தது.

பிக்பாஸ் வீட்டில் சமத்து பிள்ளையாக இருந்தவர், தன் வீட்டில் விளையாட்டு பிள்ளையாக இருந்துள்ளார். உண்மை அறிந்து படங்களில் வாய்ப்புகள் மட்டுமில்லை விளம்பர பட வாய்ப்புகள் கூட அவரை தேடி வரவில்லை.

இந்த நிலையில் வாரந்தோறும் ஈசிஆரில் பார்ட்டி கொண்டாடுவதை பய பக்தியோடு செய்து வந்த யாஷிகா, இந்த முறை பக்தி முக்தி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளார்.

சனிக்கிழமை இரவு… நள்ளிரவு நேரம்… நண்பர்கள் உடனிருக்க… யாஷிகா, என்ன நிலையில் இருந்திருப்பார் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

ஆண் நண்பர் இருவர் பின் அமர்ந்திருக்க, வள்ளி ஷெட்டி என்ற தோழி முன் சீட்டில் அமர்ந்திருக்க விளையாட்டு பிள்ளை யாஷிகாதான் காரை இயக்கியுள்ளது.

நிதானம் இழந்தவர் கையில் இருந்த ஸ்டேரிங்கும் ஒரு கட்டத்தின் நிதானம் தவறி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இடுப்பு மற்றும் வலது கால் முறிந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் யாஷிகா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈசிஆர் என்பது சென்னையின் தனித்தீவு. ஆட்டம், பாட்டம், மது, மாது என அனைத்தும் அங்கு சர்வ சாதாரணம். அதிலும் வார விடுமுறை நாட்கள் என்றால், பிரபலங்கள் சங்கமிக்கும் சமுத்திரமாக ஈசிஆர் மாறி விடுகிறது.

இங்கு மதுவில் மூழ்கும் போதை வண்டுகள் சாலைக்கு வந்து ஏற்படுத்தும் விபத்துகள் ஏராளம்.

இந்த முறை யாஷிகா சம்பந்த பட்டதால் விபத்தும் உயிரிழப்புகளும் வெளியே தெரிய வருகிறது. இல்லையெனில் பத்தோடு பதினொன்றாக அதுவும் முடிந்திருக்கும்.

Exit mobile version