திருமண மோசடி வழக்கில் சிக்கிய நடிகை ஸ்ருதியிடம், கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இன்னும் திரைக்கு வராத ‘ஆடி போனா ஆவணி’ என்ற படத்தில் நடித்துள்ள ஸ்ருதி என்ற நடிகை, சமூக வலைதளங்களில் மணமகன் தேடுவதாக போட்டோவுடன் விளம்பரம் செய்தார். விளம்பரத்தை பார்த்து தொடர்பு கொள்பவர்களிடம், நெருங்கிப் பழகி, பின் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். நெருங்கி பழகுவர்களிடம் சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாக கூறி, லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு, திருமணம் செய்யாமல் ஏராளமான இளைஞர்களை ஏமாற்றியதாக ஸ்ருதி மீது புகார் கூறப்பட்டது. மேலும், சாப்ட்வேர் இன்ஜினியர், தொழிலதிபர்கள் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து சேலத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். சைபர் கிரைம் காவல் துறையினர் 3 மணிநேரம் மோசடி வழக்கு தொடர்பாக, ஸ்ருதியிடன் விசாரணை நடத்தினர்..