நடிகை நயன்தாரா கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை!

நடிகை நயன்தாரா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக வதந்திகள் பரவிய நிலையில், அவர் நலமுடன் இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதில் உண்மையில்லை என்றும், முழுக்க முழுக்க வதந்தி என்றும் நயன்தாராவின் மக்கள் தொடர்பாளர் குழு தெரிவித்துள்ளது. கடைசியாக ஹைதராபாத்தில் நடைபெற்ற அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட நயன்தாரா, படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது முதல் தனிமனித விலகலை கடைபிடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version