நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் விவேக் அனுமதிக்கப்பட்டுள்ளார். படபிடிப்பு தளத்தில் இருந்த நடிகர் விவேக்கிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விவேக்கிற்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இது மாரடைப்பு அல்ல சாதாரண ஜுரம்தான் என்று விவ்வேக்கின் நெருங்கிய நண்பரான தேனி கண்ணன் சொல்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.