தமிழ்சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோக்கள் விஜய் மற்றும் சூர்யா. சூர்யா அறிமுகமான நேருக்கு நேர் படத்தில் நடிகர் விஜய் இணைந்து நடித்திருப்பார். அதே போல் விஜய்யுடனான நட்பின் காரணமாக இருவரும் தனக்கென தனி ரசிகர்களை கொண்ட காலத்தில் “ப்ரண்ட்ஸ்” படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து நடித்திருப்பார்கள்.
இந்நிலையில் இன்றைய தினம் விஜய் மற்றும் சூர்யா இணைந்த புகைப்படம் ஒன்று வைரலானது. அதற்கு காரணம் சிறுவயதில் இருவரும், தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும், சூர்யாவின் தந்தையுமான சிவகுமார் மடியில் அமர்ந்து அந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சினிமாவிற்கு வருவதற்கு முன்பே இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.