மனைவிக்கு விஜய் கொடுத்த முதல் கிஃப்ட்; டாக்டராக்க விரும்பிய பெற்றோர் – விஜய் பிறந்த நாள் பகிர்வு

47வது பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். இந்நேரத்தில் அவர் குறித்த நாஸ்டாலஜிகளை பார்ப்போம்.

விஜய் நடித்த ரசிகன் படத்திலிருந்துதான் அவருக்கு `இளைய தளபதி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. அதேபோல ரசிகர்கள் அன்பால் இளையதளபதி என கொண்டாடப்பட்டவர், மெர்சல் படத்திலிருந்து தளபதியாக மாறினார்.

தெலுங்கில் ராம்சரணை வைத்து படம் இயக்கும் ஷங்கர் – இசையமைப்பாளர் யார் தெரியுமா?…

விஜய் காதலித்து கரம்பிடித்தவர் அவரது மனைவி சங்கீதா என்பது அனைவரும் அறிந்ததே. திருமணம் முடிந்து சங்கீதாவுக்கு விஜய் முதன்முதலாக கொடுத்த பரிசு வெள்ளிக்கொலுசு தான். அதுமட்டுமில்லாமல் மோதிரம் ஒன்றையும் அன்பு பரிசாக கொடுத்திருக்கிறார். ரசிகன் படத்தில் பாம்பே சிட்டி பாடல்தான் விஜய் பாடிய முதல் பாடல். இதுவரை மொத்தம் 34 பாடல்களை பாடியுள்ளார்.

தொடக்கத்தில் விஜயை அவரது பெற்றோர் மருத்துவராக்கி அழகு பார்க்க வேண்டும் என்று தான் நினைத்தார்கள். ஆனால் காலம் எல்லாற்றையும் மாற்றியது. அதுமட்டுமில்லாமல், விஜய்க்கு சினிமா மேல் இருந்த தீவிர ஆர்வமும் இதற்கு ஒரு காரணம் தான் இன்று அவர் உச்சநட்சத்திரமாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

இறை நம்பிக்கை அதிகம் உள்ள நடிகர் விஜய் தனது பிறந்தநாளின் போது சாமி கும்பிட்டு, பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

Exit mobile version