நடிகர் ரஜினி கட்சித் தொடங்குவாரா என அவருக்கே தெரியாது: நடிகர் வடிவேலு கருத்து

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவாரா இல்லையா என்பது அவருக்கே தெரியாது என பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் வடிவேலு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். முதலமைச்சர் பதவி தொடர்பான ரஜினியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் வடிவேலு, மக்களுக்கு நல்லதை யார் செய்தாலும் அதனை வரவேற்கலாம் எனக் கூறினார்.

Exit mobile version