விதியை மீறி நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்திருந்தாலும், அவ்வாக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்

விதியை மீறி நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்திருந்தாலும், அவரது வாக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் குறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பல்வேறு தகவல்களை வழங்கியுள்ளார். நடிகர் ஸ்ரீகாந்த் வாக்குப்பதிவு செய்தது தொடர்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். விதியை மீறி நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்திருந்தாலும், அவரது வாக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். .

மதுரையில் அதிகாரிகள் மின்னணு வாக்குப்பதிவு மையத்துக்குள் நுழைந்தது தொடர்பான அறிக்கை, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இடைத்தேர்தல் நடைபெற உள்ள 4 தொகுதிகளில் 3 பறக்கும் படையினர் பணியாற்றுவார்கள் என்றும், இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட, 6 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் சத்யபிரதா சாஹூ குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version